31.07.2026 அன்று சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கும் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தடயவியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
