ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Vetri Thamizhagam
By -
0

 


சென்னை:தென்மேற்கு பருவமழை, குடிநீர் விநியோகம், வேளாண் சாகுபடி குறித்து ஆய்வு செய்து அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு ,குடிநீர் விநியோகம் மற்றும் வேளான் பயிர்சாகுபடி குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.


இதனைத் தொடர்ந்து,குடிநீர் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி ரூபாய் ஒதுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு இயல்பான அளவை விட குறைவாக பெய்துள்ளது. 20 மாவட்டங்களில், 19 முதல் 59 சதவீதம் வரை இயல்பை விடக் குறைவாகவும், செங்கல்பட்டு ராமநாதபுரம் மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கு குறைவாகவும் மழைப்பொழிவு பதிவாகிஉள்ளது.

இதனால், ஆழ்துளைக் கிணறுகளை தூர்வாருதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், பழுதடைந்த மின்சார கம்பிகளை மாற்றியமைத்தல், மின்மாற்றிகளில் பழுது நீக்கம் , அத்தியாசியமான இடங்களில் லாரிகள் வாயிலாக குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு குடிநீரை தங்கு தடையின்றி வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளை துரிதமாகச் செயல்படுத்திடவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும்லாரிகள் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்திட 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம்,மீனவர் நலத்துறைக்கு 10 கோடி ரூபாயும் என ரூ.340 கோடி ரூபாய் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.

கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய மாவட்டங்களுக்கு சென்று, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கலெக்டர்கள் தலைமையில் வாரந்தோரும் திங்கட்கிழமை, குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தி உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!