அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் - திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்’ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு இந்தாண்டு 50 முதல் 60 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ஆறு மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை மேற்கொண்ட நேரடி கள ஆய்வுகள் குறித்தும், அனைத்து பக்தர்களும் சிறப்பாக விழாவில் பங்கேற்று திரும்பும் வகையில் ஒவ்வொரு துறைசார்ந்த அலுவலர்களுக்கும் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசித்தோம்
