காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக மாநில அளவிலான “ JOSH அணி

Vetri Thamizhagam
By -
0

 


புதுடெல்லி பாரத் மண்டபத்தில் காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்குவதற்காக தேசிய அளவிலான JOSH (Joint Squad for Health) அணி தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
ஒன்றிய அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு.ஜெகத் பிரகாஷ் நட்டா அவர்கள் தலைமையில் நடந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்ற முறையில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டோம்.
காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக மாநில அளவிலான “ JOSH அணியை” தொடங்கி வைத்தோம்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது,இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் ச.அனீஷ்சேகர்,இ.ஆ.ப., மாநில காசநோய் அலுவலர் டாக்டர்.ஆஷா ஃபிரடரிக் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)